யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை மீன்பிடி இறங்குதுறை நடுத்தர முதலீட்டுடன் மீளமைக்கும் செயற்பாடு நாளைய தினம் வியாழக்கிழமை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
கடற்தொழில் அமைச்சர் இ. சந்திரசேகரின் நிதியோதுக்கீட்டின் கீழ் மீள் புனரமைக்கப்படவுள்ளது.
நீண்ட காலமாகத் துறையின் பாதை கடலரிப்பினால் இருபுறமும் சிதைவுற்ற நிலையிலும், முனையம் மூன்று பக்கமும் மண்ணரிக்கப்பட்டுச் சிதைவடைந்ததாயும் காணப்படும் நிலையில் குறித்த துறைக்கான பாதை அகலப்படுத்தலுடன் முனையம் சீர்ப்படுத்தலும் இடம்பெறவுள்ளது.









No comments