கல்வி ஊழியர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் வடமாகாண கிளிநொச்சி காரியாலத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுக்காக ஊக்குவிப்புத் தொகை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை கிளிநொச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட காரியாலய உதவிப் பொது முகாமையாளர் ஆர்.பி.எஸ்.பி.ரத்னவீர தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்விக் கூட்டுறவுச் சங்கத்தின் வடமாகாணப் பணிப்பாளர் டெலாஸ் சாள்ஸ் டென்சில்ராஜ், காரியாலய வடமாகாண வலய முகாமையாளர் குணசேகரன் சுரேன், காரியாலய உதவிக் கணக்காளர் பத்திமா நவராஜா ஜேம்ஸ் சுதர்சன், காரியாலக ஊழியர்கள் மற்றும் அங்கத்தவர்கள், புலமைப்பரிசில் சித்தியடைந்த பிள்ளைகள் கலந்து கொண்டனர்.
2024 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளைக் கடந்த மாணவர்களுக்கு இதன் போது ஊக்குவிப்புத் தொகையும், வைப்புப் புத்தகமும் வழங்கப்பட்டது
No comments