மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள கழி ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் யானைத் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
கிரான் பகுதியைச் சேர்ந்த மூத்ததம்பி சீனித்தம்பி (வயது 68) என்பவரே உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டிலிருந்து பூலாக்காடு, சீல்லிக்கொடி பகுதியில் உள்ள கழி ஒன்றில் மீன்பிடிப்பதற்காகச் சென்றவர், இரவாகியும் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து, அவரை உறவினர்கள் தேடிச் சென்றபோது, யானைத் தாக்குதலில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments