தியாக தீபம் திலீபனின் 09ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேவேளை தியாக தீபத்தின் திருவுருவ படத்தை தாங்கிய ஊர்தியும் நினைவிடத்திற்கு வருகை தந்த நிலையில் , ஊர்தியில் இருந்த திருவுருவ படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த ஊர்தியானது யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லவுள்ள நிலையில் , ஊர்தி செல்லும் இடங்களில் மக்கள் அஞ்சலிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments