Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

‘சினிமா குழுமங்களை உருவாக்குதல்‘ - கோப்பாய் பிரதேச செயலகம் முன்மாதிரி!


கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ‘திரைப்படக்கலையை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்வோம்‘ என்னும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக கோப்பாய் பிரதேச செயலகப்பிரிவில் குறும்படத்திரையிடலும் கலந்துரையாடலும் கோப்பாய் பிரதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

கலாசார அதிகார சபையின் பங்களிப்போடு நடாத்தப்பட்ட இந்நிகழ்வில், அப்பிரதேசத்துக்கு உட்பட்ட கலைஞர் - இயக்குநர் கனகநாயகம் வரோதயனின் குறும்படம் திரையிடப்பட்டது.

கர்ணன் படைப்பகம் தயாரிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு பல்வேறு விருதுகளை வென்ற ‘தமிழ்ச்செல்வி‘ குறும்படம் இதன்போது திரையிடப்பட்டதுடன் படம் தொடர்பிலான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலாசார அதிகார சபையினர், கலைஞர்கள், பிரதேச கலாசார அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் புதிதாக முன்னெடுத்துள்ள கலாசார மத்திய நிலையங்களில் சினிமா குழுமங்களை உருவாக்கும் நாடளாவிய திட்டத்தின் கீழ், கோப்பாய் பிரதேச செயலகம் உடனடியாக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக எம்மவர் சினிமா படைப்புக்களை திரையிடுவதுடன், அது தொடர்பிலான திறந்த கலந்துரையாடல்களை நடாத்தி திரைப்படக் கலையை பிரதேச மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல தம்மாலான பங்களிப்பை வழங்குவதாக நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டனர்.





No comments