Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பற்றைக்காடாக காட்சியளிக்கும் விளாவெளி இந்து மயானம்


வலிகாமம் தென்மேற்கு மானிப்பாய் பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட  விளாவெளி இந்துமயானம் உரிய பராமரிப்பின்றி பற்றைக்காடுகள் நிறைந்து காணப்படுவதாக மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அ.ஜோன் ஜிப்பிரிக்கோ குற்றம் சாட்டியுள்ளார்.

விளாவெளி இந்து மயான உரிமை தொடர்பில் வலிகாமம் மேற்கு, வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைகளுக்கிடையே நீண்ட இழுபறி இருந்த காலத்தில் முன்னைய 2018கால எனது பதவிக்காலத்தில்  இம்மயானத்தை மானிப்பாய் பிரதேச சபை பொறுப்பேற்க வேண்டுமென தற்துணிவோடு தீர்மானத்தை கொண்டுவந்து முதற்கட்டமாக மயானத்தை துப்பரவு செய்து அதன் எரிகொட்டகை, இளைப்பாறு மண்டபபுனரமைப்பு, மயான எல்லைப்படுத்தல் போன்ற அபிவிருத்தி பணிகளை சிறப்பாக அன்றைய தவிசாளருடன் இணைந்து செயற்படுத்தி இருந்தேன்

. விளாவெளி மயானத்தை மானிப்பாய் பிரதேச சபை ஆளுகைக்குள் எடுப்பதற்கும் அபிவிருத்தி பணிகள் நடப்பதற்கு காரணமாக இருந்தவன் என்கிற அடிப்படையில் தற்போது மயானம் உரிய பராமரிப்புகள் இன்றி பற்றைக்காடாக மாறியிருப்பது கண்டு மிகுந்த மனவேதனையடைகிறேன். 

தற்போதைய பண்டத்தரிப்பு வட்டார உறுப்பினரோ, மானிப்பாய் பிரதேசசபை தவிசாளரோ இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்காதது வேதனையானது 

பிரதேச சபைக்கென JCBரக கனரக இயந்திரம் இல்லாத காலப்பகுதியில் பல லட்சம் செலவில் விளாவெளி மயானத்தை நான் பிரதேச சபை ஊடாக துப்பரவு செய்திருந்தேன்.  

தற்ப்போது பிரதேச சபைக்கு சொந்தமாக Jcb ரக கனரக இயந்திரம், சாரதி ,மயான அபிவிருத்திக்களை கண்காணிக்கவென பிரதேச சபை உறுப்பினர்களை உள்ளடக்கிய தனிக்குழு இருந்தும் இம்மயானம் பற்றைக்காடாக காட்சியளிப்பது பிரதேச சபை நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையாகவே இதை கருத வேண்டும் 

ஆகவே பொதுமக்களின் நன்மை கருதி விளாவெளி இந்து மயானத்தை முழுமையாக துப்பரவு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.  என தெரிவித்துள்ளார்

No comments