யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட வர்த்தக, வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க, யாழ் மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
யாழ் . மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் பங்கேற்புடன் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில், வர்த்தக, வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க கருத்து தெரிவிக்கையில்,
தற்போது வருடத்திற்கு இருநூற்று நாற்பதாயிரம் மெற்றிக்தொன் கீரி சம்பா அரிசி தேவைப்பாடு உள்ளது. ஆனால் நாட்டில் 160ஆயிரம் மெற்றிக்தொன் கீரி சம்பா அரிசி மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. அதனால் சம்பா அரிசி விலை அதிகரித்து செல்கிறது.
குறுங்கால தேவையை நிறைவுசெய்யும் வகையில் கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்து சதோஷ விற்பனை நிலையங்கள் ஊடாக விநியோகிக்கவும் தொடர்ந்து அதன் உற்பத்தி அளவை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
ஜனாதிபதி நாட்டிற்கு திரும்பியவுடன் நாற்பதாயிரம் மெற்றிக் தொன் கீரி சம்பா அரிசியை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான அனுமதியைப் பெற்று தருவோம்.
பொலன்னறுவையில் இருந்து கொள்வனவு செய்யப்படும் கீரி சம்பா அரிசியை அங்கீகரிக்கப்பட்ட விலையில் கொள்வனவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும்.
நெல் விளைச்சல் அதிகமாக உள்ள பொலன்னறுவை அநுராதபுரம் மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் அரிசி ஆலைகள் நிறுவப்பட உள்ளது.
அத்துடன் சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக பிறவுன் சீனி , அரிசி உள்ளிட்ட 23 வகையான பொருட்களை விநியோகம் செய்யவுள்ளோம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
No comments