கிராமிய அபிவிருத்தி சமுக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சுன்னாகம் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் பனைசார் உற்பத்தியாளருக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சுன்னாகம் ப.தெ.அபி.கூ.சங்க காரியாலயத்தில் நடைபெற்றது.
கிராமிய அபிவிருத்தி சமூகபாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே, பாராளுமன்ற உறுப்பினர்களான கருணானந்தன் இளங்குமரன் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், யாழ்.மாநகர சபை உறுப்பினர் சு.கபிலன், துறைசார் அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.












No comments