யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலையும், நாகவிகாரையும் தரிசித்து சமயத் தலைவர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.
இவ்வேளையில் அமைச்சர் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய வேலைத்திட்டம் குறித்து சமய தலைவர்களுக்கு விளக்கமளித்தார்.
சமயத் தலைவர்கள், நாட்டின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான இத்தகைய முயற்சிகள் பாராட்டத்தக்கவை என்றும், அதற்கான தங்களின் முழு ஒத்துழைப்பையும் ஆதரவும் வழங்குவதாக தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கருணானந்தன் இளங்குமரன், யாழ்.மாநகர சபை உறுப்பினர் சு.கபிலன், கட்சி உறுப்பினர், அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்










No comments