இயற்கை அனர்த்தங்களின் போது. கடற்தொழிலாளர்களின் உயிரிழப்பை தடுப்பது தொடர்பில் ஆராய்வதற்கு கடற்தொழில் அமைச்சினால் அமைக்கப்பட்ட விசேட குழு தமது அறிக்கையை கடற்தொழில் அமைச்சரிடம் கையளித்துள்ளனர்.
அக்வா பிளான்ட் இலங்கை - 2025 சர்வதேச மீன்வள கண்காட்சி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமானது. கண்காட்சியின் 2ஆம் நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.
நிகழ்வின் போது, சீரற்ற காலநிலை உட்பட இயற்கை அனர்த்தங்களால் மீனவர்கள் உயிரிழக்கும் சம்பவங்களை தடுப்பதற்குரிய விடயங்கள் பற்றி ஆராய்வதற்கு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால் அமைக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையும் அமைச்சரிடம் இன்று கையளிக்கப்பட்டது.
அதன் போது, மீன்பிடி கைத்தொழிலின்போது எவ்வித குற்றமும் இழைக்காத, சட்டத்திட்டங்களின்போது செயல்பட்ட மாத்தறை, தங்கலை, காலி ஆகிய பகுதி மீனவர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் கிஹான், தர்மபிரிய திசாநாயக்க, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் டாக்டர். பீ.கே.கோலித்த கமல் ஜினதாச, கடற்றொழில் மற்றும் கடல்வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ். ஜே. கஹாவத்தே, அமைச்சின் அதிகாரிகள், வெளிநாட்டு பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.











No comments