திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு சம்பூர் கலாச்சார மண்டபத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 800 க்கும் மேற்பட்ட மாவீரர் பெற்றோர் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர் பெற்றோர்கள் சம்பூர் பிள்ளையார் ஆலய முன்றலில் மாலை அணிவிக்கப்பட்டு மேளதாளங்களோடு விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது யுத்தத்தில் உயிர் நீத்தவர்களின் நினைவாக சுடரேற்றப்பட்டு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து நிகழ்வுகளை அடுத்து, மாவீரர் பெற்றோர்களுக்கு தென்னை மரக்கன்றுகள், அன்பளிப்பு பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.








No comments