முல்லைத்தீவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் , உரிமையாளருக்கு 50ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது.
பொதுசுகாதார பரிசோதகர்களினால் விசுவமடு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, உணவக பணியாளர்களுக்கு மருத்துவ சான்றிதழ் இல்லாமை, உணவக அனுமதிப் பத்திரம் இன்மை, தொழிலாளர்கள் முகச் சவரம் செய்யாமை, தண்ணீர் பகுப்பாய்வு சான்றிதழ் இன்மை, கழிவு தொட்டி இல்லாமை, வெற்றிலை மென்றவாறு உணவு கையாண்டமை போன்றவை கண்டறியப்பட்டு , உரிமையாளருக்கு எதிராக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது , உரிமையாளர் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதை அடுத்து , உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , உணவகத்தில் காணப்படும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வரையில் , உணவகத்திற்கு சீல் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் , 50 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்தது.






No comments