தங்காலை பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்டதுப்பாக்கி சூட்டு சம்பவத்தில் வயோதிப தம்பதிகள் உயிரிழந்துள்ளனர்.
தங்காலை பகுதியை சேர்ந்த விஜிததாச (68 வயது) மற்றும் ஹென்னடிகே புஷ்பா (58 வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
தம்பதியினர் கடை ஒன்றினை நடாத்தி வருகின்றனர் , கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த கைத்துப்பாக்கியால் கணவன் - மனைவியை இலக்கு வைத்து துப்பாக்கி சூட்டினை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான தம்பதி உயிரிழந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் உனகுருவ சாந்தாவின் தாய் மாமனும் மாமியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்






No comments