இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அழைப்பின் பேரில் தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்த நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தை பார்வையிட்டனர்.
14 அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 24 பேர் கொண்ட இளம் அரசியல் தலைவர்கள் குழு இந்தியாவிற்கு விஜயம் செய்ததன் தொடர்ச்சியாக வடக்கு மாகாண விஜயம் மேற்கொண்டனர்.
இவ் விஜயத்தின் போது குறித்த குழுவினர் நேற்றையதினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரை புகையிரதத்தில் பயணித்து காங்கேசன்துறை துறைமுகம், மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையம் ஆகியவற்றுக்குச் சென்று அங்குள்ள அபிவிருத்தி நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.











No comments