தமிழ் மக்கள் கூட்டணியின் வலிகாமம் தென்மேற்கு கிளை அலுவலகம் இன்றைய தினம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் சங்கரப்பிள்ளை வீதியில் , அமைந்துள்ள குறித்த அலுவலகத்தை, கட்சியின் உப செயலாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன், வலி. தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜெ. வீரசிங்கம் உள்ளிட்டோர் நாடா வெட்டி திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் , நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் , வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபையின் தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர்கள் , ஏனைய பிரதேசசபை உறுப்பினர்கள் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




.jpg)
.jpg)
.jpg)


No comments