யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் இருந்து யாழ். நகர் பகுதிக்கு மீன் பெட்டிக்குள் மாட்டிறைச்சியை கடத்தி சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அராலி சந்திக்கு அருகில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை ஊர்காவற்துறை பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை, மோட்டார் சைக்கிளில் மீன் பெட்டி கட்டி சென்றவர் மீது சந்தேகம் கொண்டு அவரை வழிமறித்து சோதனை செய்த வேளை , மீன் பெட்டிக்குள் இருந்து பொதி செய்யப்பட்ட நிலையில் 35 கிலோ மாட்டிறைச்சியை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அதனை அடுத்த குறித்த நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை , தீவகம் பகுதியில் தனியார் மாடுகளை களவாடி அவற்றை சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கி யாழ் . நகர் பகுதிக்கு கொண்டு சென்று விற்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமையால் , மாட்டு திருடர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீவக மக்கள் பல்வேறு தரப்பினரிடமும் தொடர்ந்து கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







No comments