Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தைப்பொங்கலுக்கு யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி


தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவுள்ளார். 

யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி , 15ஆம் திகதி மதியம் 2 மணியளவில் வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணியம் சுவாமி கோவில் முன்றலில் நடைபெறும் பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். 

பின்னர் அங்கிருந்து மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய முன்றலில் நடைபெறும் பொங்கல் நிகழ்வில் மாலை 4 மணியளவில் கலந்து கொள்ளவுள்ளார். 

மறுநாள் 16ஆம் திகதி காலை 09 மணிக்கு மீசாலை ஆரம்ப பாடசாலையில் வீட்டு திட்ட பயனாளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வார். 

பின்னர் மதியம் 2 மணியளவில் கொக்குவில் தொழிநுட்ப கல்லூரி மைதானத்தில் "முழு நாடும் ஒன்றாக .. " போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். 

No comments