பொலிஸார் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்த முற்பட்ட நபர் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
வெலிக்கந்தை பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூன்று பேர் பயணித்த வேளை பொலிஸார் மோட்டார் சைக்கிளை வழிமறித்த போது , அவர்கள் தப்பியோடியுள்ளனர்.
தப்பியோடியவர்களை பொலிஸார் துரத்தி சென்ற வேளை நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி தனது வீட்டினுள் ஓடியுள்ளார். அவரை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட வேளை , வீட்டினுள் இருந்து பெரிய கத்தி ஒன்றினை எடுத்து வந்து பொலிசாரை மிரட்டி ,தாக்க முற்பட்டுள்ளார். அதன் போது பொலிஸார் குறித்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் அந்நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபருக்கு எதிராக போதைப்பொருள் தொடர்பிலான குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற ஏனைய இருவரையும் கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.







No comments