மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நீண்ட காலமாக மூடப்பட்டு காணப்பட்ட வீதி, மன்னார் நகர சபையால் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.
1983-1984 ஆண்டு காலப்பகுதி வரை மக்கள் பயன்பாட்டில் இருந்த குறித்த வீதியானது நீண்ட காலமாக மக்கள் பயன்பாடு இன்றி மூடப்பட்டு காணப்பட்டது.
குறித்த வீதி மூடப்பட்ட காலப்பகுதியில் இராணுவ சோதனை சாவடி மற்றும் இராணுவ பாஸ் வழங்கும் அலுவலகங்கள் அப்பகுதியில் செயல்பட்டு வந்தது.
யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் அவ்விடத்தில் இருந்து இராணுவத்தினர் வெளியேறிய பின்னர் நீதிமன்ற கட்டு காவல் பொருட்கள் சேமிக்கப்பட்டு வந்ததோடு, பயன்படுத்த முடியாமல் காணப்பட்ட நிலையில் காணப்பட்டது.
இந்நிலையில் குறித்த வீதி மற்றும் அதைச் சூழ உள்ள பகுதிகள் நகரசபையால் சுத்தம் செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





.jpeg)





No comments