யாழ்ப்பாணம் எழுவை தீவில் தனியாருக்கு சொந்தமான காணிகளை கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிப்பதற்காக அவற்றை அளவீடு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
எழுவை தீவில் ஜே / 39 கிராம சேவையாளர் பிரிவில் தனியார் ஒருவருக்கு சொந்தமான 2 பரப்பு காணியை எதிர்வரும் 20 ஆம் திகதி அளவீடு செய்வதற்கான அறிவித்தாலும் , 3ஆம் வட்டாரத்தில் தனியாருக்கு சொந்தமான 53 பேர்ச் காணியையும் கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிப்பதற்கு , அவற்றை அளவீடு செய்யும் பணிகள் 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
கடந்த 3 வருட காலத்திற்கு முன்பும் , குறித்த காணிகளை சுவீகரிப்பதற்காக அளவீடு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படவிருந்த போது , காணி உரிமையாளர்களுடன் இணைந்து அரசியல் தரப்பினர் மக்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தமையால் அப்பணிகள் கைவிடப்பட்டன.
இந்நிலையில் " மக்களின் காணி மக்களுக்கே .. " என கூறும் அரசாங்கத்தின் காலத்திலும் , தனியாரின் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்படுவது குறித்து காணி உரிமையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை எதிர்வரும் 15ஆம் திகதி ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்து இரு நாட்கள் யாழில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ள நிலையில் 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் பொது மக்களின் காணிகளை சுவீகரிக்கும் நோக்குடன் அவற்றை அளவீடு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது







No comments