யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாத நிலையில் காணப்பட்ட 10 வீதிகளின் புனரமைப்பு பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்படும் நிலையில் , அவற்றின் சில வீதிகள் புனரமைப்பு முடிவுடையும் தருவாயில் காணப்படுகிறது.
துரித கெதியில் முன்னெடுக்கப்படும் வீதி புனரமைப்பு பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிபவனந்தராசா நேரில் சென்று பார்வையிட்டார்.
காரைநகர் பிரதேசத்தில் காணப்படும் வீதிகளில் பல நீண்ட காலமாக புனரமைப்புக்கள் இன்றி குன்றும் குழியுமாக காணப்படுவதால் , அவ்வீதி ஊடாக பயணிப்போர் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தமது அன்றாட பயணத்தை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் காரைநகரில் தெரிவு செய்யப்பட்ட 10 வீதிகளின் புனரமைப்பு பணிகள் 44.5 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அவற்றில் பெருமளவான வீதிகளின் புனரமைப்பு பணிகள் முடிவடையும் தருவாயில் காணப்படும் நிலையில் , வீதி புனரமைப்பு பணிகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபவனந்தராசா நேரில் சென்று பார்வையிட்டார்.
புனரமைப்பு செய்யப்படும் வீதிகள் பின்வருமாறு,
01.சயம்பு வீதி – 600 மீட்டர்
02.பொன்னம்பலம் வீதி – 300 மீட்டர்
03.ஒளிச்சுடர் Sports Club வீதி – 500 மீட்டர்
04.விளானை கனவோடை திக்கரை வீதி – 500 மீட்டர்
05.UNDP RDS வீதி – 377 மீட்டர்
06.வேம்படி 1ம் ஒழுங்கை – 130 மீட்டர்
07.வியாவில் தீர்த்தக்கரை வீதி – 277 மீட்டர்
08.ஊரி முருகன் கோவில் 1ம் ஒழுங்கை – 179 மீட்டர்
09.பயிரிக்கூடல் முருகன் கோவில் வீதி – 271 மீட்டர்
10.VTA வீதி – 200 மீட்டர்

















No comments