வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் 2026ம் ஆண்டுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு கொல்லங்கலட்டியில் அமைந்துள்ள வலி வடக்கு தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.
வலி வடக்கு பிரதேசசபை செயலாளர் சிவகுமார் சிவானந்தனால் தேசியக்கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து ஊழியர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து வலி வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில்,
இப்புதிய வருடத்தில் வலி வடக்கின் அபிவிருத்தி செயற்பாடுகளை மேலும் துரிதகதியில் மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக யாழ் நகரத்தை மையப்படுத்தி காணப்பட்ட சுற்றுலாத்துறை வலி வடக்கு பகுதியை நோக்கி நகர்வதாகவும் அதற்கு குறிப்பாக காங்கேசன்துறை கடற்கரையில் கடந்த வருட இறுதியில் நடைபெற்ற அலையோடு உறவாடு நிகழ்வு சிறந்த எடுத்துக்காட்டாகும் எனவும் தெரிவித்தார்.
இந் நிகழ்வு போல் இப் புதிய ஆண்டிலும் நிகழ்சிகளை நடாத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட அனர்த்தகாலத்தில் மக்களுக்காக களங்களில் பணிகளையாற்றிய பிரதேசசபை ஊழியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.













No comments