Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நல்லூர் பிரதேச சபை நிதியினை வீண்விரயம் செய்யவில்லை - தவிசாளர் தெளிவுபடுத்தல்


நல்லூர் பிரதேச சபை வெளிவாரி ஊழியர்களுக்கு கொடுப்பனவுகளைச் செலுத்தி நிதியினை வீண்விரயம் செய்யவில்லை எனவும் சபையில் தீர்மானங்கள் எடுக்கும் போது , அதற்கு ஆதரவளித்து பின்னர் அரசியல் நோக்கங்களுக்காக சிலர் திரிவுபடுத்திய தகவல்களை வெளியிடுவதாகவும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், 

நல்லூர் பிரதேச சபை வெளிவாரியாக ஒப்பந்த அடிப்படையில் உள்வாங்கிய ஊழியர்களுக்கு மிகப் பெரிய தொகையினை வழங்கி வருவதாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குற்றம்சாட்டி வருகின்றார்கள்.

 வெளிவாரியாக உள்வாங்கப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவு குறைவாக இருக்கின்ற காரணத்தினால் அவர்களுக்கான கொடுப்பனவுத் தொகையினை உரிய சட்ட ஏற்பாடுகளுக்கு அமையவும் உரிய நடைமுறைகளின் பிரகாரம் உயர்த்துவதற்கு கடந்த வருடம் யூன் மாதம் சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டு அத் தீர்மானத்திற்கு அமைய ஆகஸ்ட் மாதத்திலிருந்து குறித்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது.

 குறித்த தீர்மானத்திற்கு தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் ஆதரவளித்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

அத்துடன் எமது மீள் சுழற்சி மையங்களில் கழிவுப் பொருட்களினை தரப்பிரிப்பதற்கென மேலதிக ஊழியர்கள் உள்வாங்கப்பட்டமை போன்ற செயற்பாடுகளினால் வெளிவாரி ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற மொத்தக் கொடுப்பனவுத் தொகை அதிகரித்துச் சென்றுள்ளது. 

ஆனால் யாருக்கும் நல்லூர் பிரதேச சபை தேவையில்லாமல் கொடுப்பனவுகளை வழங்கவில்லை. அவர்கள் செய்கின்ற பணிக்கு அவர்களுக்குரிய கொடுப்பனவுகளை உரிய முறைப்படி வழங்கி வருகின்றது.

அதேவேளை சபை அமர்வினைப் பார்வையிடுவதற்கு நல்லூர் பிரதேச சபை கொடுப்பனவு வழங்வதாக கூறப்பட்டமை தொடர்பாகவும் தெளிவு படுத்த வேண்டும். 

அந்த வகையில், சபை அமர்பினை பார்வையிடுவதற்கும் நல்லூர் பிரதேச சபை கொடுப்பனவு வழங்கி வருவதாக பொய்யான தகவலிலைத் தெரிவித்து தங்களை சிறுமைப்படுத்தி யுள்ளவர்கள். அவர்கள் கூறுகின்ற வரதராஜன் பார்த்திபன் என்னும் நபர் வெளிவாரி அடிப்படையில் அலுவலகப் பணியாளராக உள்வாங்கப்பட்டு பணிபுரிகின்றார். 

அவருக்கான அலுவலகக் கடமையுடன் என்னுடைய தனிப்பட்ட உதவியாளராகவும் கடமை ஆற்றிவருகின்றார். அவர் சபை நடவடிக்கையினை பார்வையிடுவதற்கு நல்லூர் பிரதேச சபை அவருக்கு கொடுப்பனவு வழங்கவில்லை. மாறாக ஏனைய வெளிவாரி பணியாளர்களுக்குரிய நடைமுறைபோல் அவர் தன்னுடைய பணிக்காக நல்லூர் பிரதேச சபைக்கு வரும் நாட்களுக்கு மட்டும் அவருக்கான கொடுப்பனவு நல்லூர் பிரதேச சபையினால் வழங்கப்படுகின்றது. 

குறித்த நபர் நல்லூர் பிரதேச சபையின் கழிவற்றலினை மேம்படுத்துவதற்குரிய ஜி.பி.எஸ் வசதிகளை ஏற்படுத்தல், வாகனங்களின் வழித்தடங்களை தினசரி ஆராய்ந்து அறிகையிடல், வாகன வழித்தடங்களை வரைதல், வட்டார வரைபடத்தினை வரைதல் மற்றும் இலத்திரனியல் மயப்படுத்தல், கண்காணிப்பு கமராக்கள் தொடர்பான விடயங்கள், எனக்கு வருகின்ற விடயங்களினை ஆவணப்படுத்துதல். நல்லூர் பிரதேச சபையின் தரவுகளினை ஒழுங்கமைத்தல் அதனை தரவுத் தளம் ஒன்றின் ஊடாக பேணுதல், நல்லூர் பிரதேச சபையின் ஊடகப்பிரிவு முகப்புத்தக தளத்தினை முகாமைத்துவம் செய்தல், என்னுடையதும் எமது உறுப்பினர்களினதும் கடிதங்களை வரைதல், எமது உறுப்பினர்கள் அவ்வப்போது கேட்கின்ற பணிகளினைச் செய்து கொடுத்தல் ஆகிய பணிகளுக்கு மேலதிகமாக அவ்வப்போது என்னாலும் நல்லூர் பிரதேச சபையினாலும் கொடுக்கப்படுகின்ற ஏனைய பணிகள் ஆகிய பணிகளினைச் செய்து வருகின்றார். 

அதற்குரிய கொடுப்பனவே குறித்த நபருக்கு வழங்கப்படுகின்றதே ஒழிய தேவையில்லாமல் குறித்த நபருக்கு மட்டுமல்ல வேறு எந்த நபருக்கும் நல்லூர் பிரதேச சபை கொடுப்பனவுகளைச் செலுத்தி நிதியினை வீண்விரயம் செய்யவில்லை.

நல்லூர் பிரதேச மக்களின் வாழ்வியல் மற்றும் உட்டுகட்டுமான மேம்பாட்டுக்காக செயற்படுகின்ற நல்லூர் பிரதேச சபை தன்னால் இயன்ற பணிகளினை இயலுமானவரை வினைத்திறனாக செய்து வருகின்றது என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.

No comments