மட்டக்களப்பு குருக்கள்மடம் மனிதபுதைகுழி அகழ்வின் முதலாம் கட்டப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையைத் தொடர்ந்த களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.பிரதீபனின் முன்னிலையில் அகழ்வுப் பணி இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
காணாமலாக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகள், பொலிசார், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினர் , இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர், தடயவியல் பிரிவு, தொல்லியல் திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்டவர்கள் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்ட இடத்திற்கு பிரச்சன்னமாகி இருந்தனர்.










No comments