Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நீர்கொழும்பில் கார் மீது துப்பாக்கி சூடு - காரில் பயணித்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது


நீர்கொழும்பு பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை  கார் ஒன்றின் மீது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

குறித்த காரைச் சோதனையிடுவதற்காக நிறுத்துமாறு சைகை காட்டியபோது, அதனை நிறுத்தாது தொடர்ந்து  செலுத்தியதால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

துப்பாக்கிச் சூட்டுடன் அந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், இந்தச் சம்பவத்தின் போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து, காரில் இருந்த இருவர் 500 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments