பெற்றோல் விற்பனை செய்வதற்கான முறையான அனுமதிப்பத்திரம் இன்றி, லொறி ஒன்றில் 65 லீட்டர் பெற்றோலை வைத்திருந்த நபருக்கு 2,500 ரூபாய் அபராதமும் 2 மாத கால கட்டாயச் சிறைத் தண்டனையும் விதித்து கல்கிசை நீதவான் பசான் அமரசேன உத்தரவிட்டார்.
கல்கிசை, படோவிட்ட பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளவத்தை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இருந்து அதிகளவு எரிபொருளைப் பெற்றுக்கொண்டதாக வெள்ளவத்தை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலேயே குறித்த நபரை கைது செய்தனர்
கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், லொறியில் இருந்த 4 எரிபொருள் கலன்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட எரிபொருளின் மொத்த மதிப்பு சுமார் 20,000 ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரை கல்கிசை நீதிமன்றில் முற்படுத்திய வேளை 2500 ரூபாய் தண்டம் விதித்த மன்று , 2 மாத கால கட்டாய சிறைத்தண்டனையும் விதித்தது.







No comments