நயினாதீவில் வீசிய மினி சூறாவளியால் இறங்கு துறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகை தூக்கி வீசப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் சீரற்ற கால நிலைமை காணப்படுவதனால் , யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை மழை பெய்திருந்தது.
அந்நிலையில் தீவக பகுதியில் பலத்த காற்றும் வீசி வருவதனால் , தீவகத்திற்கான படகு சேவைகள் தாமதப்பட்டுள்ளது.
அதேவேளை நயினாதீவு பகுதியில் வீசிய காற்றினால் நயினாதீவு இறங்கு துறை பகுதியில் பக்தர்களின் நலன் கருதி அமைக்கப்பட்டிருந்த நிழற் கொட்டகைகள் சேதமடைந்துள்ளன.








No comments