Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். அடையாள அட்டை இன்றி கடைக்கு சென்றவர் கைது - கைதானதை வீட்டாருக்கு தெரிவிக்கவிடாது தடுத்த பொலிஸார்


தேசிய அடையாள அட்டை இன்றி வீதியில் நின்றார் என குடும்பஸ்தர் ஒருவரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்து , அவரிடம் இருந்து கைரேகைகள் பெற்று விடுவித்துள்ளனர். 

குறித்த கைது சம்பவம் தொடர்பில் குடும்பஸ்தர் தனது வீட்டாருக்கு அறிவிக்க அனுமதி வழங்காது அவரது கையடக்க தொலைபேசியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

காங்கேசன்துறை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் வீட்டில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் உள்ள கடைக்கு காலையில் நடந்து சென்ற வேளை வீதியில் முச்சக்கர வண்டியில் நின்ற பொலிஸார் அவரை அழைத்து விசாரித்து ,  தேசிய அடையாள அட்டையை கோரினார். 

அருகில் உள்ள கடைக்கு நடந்து வந்ததால் , பேர்ஸ் எடுத்து வரவில்லை அருகில் தான் வீடு எடுத்து வந்து தருகிறேன் என கூறிய போது அவரை வலுக்கட்டாயமாக முச்சக்கர வண்டிக்குள் பொலிஸார் இழுத்து ஏற்றினார்கள். 

அப்போதும் தனது வீட்டிற்கு அருகில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவர் வாசிக்கின்றார். அவரிடம் தன்னை பற்றி விசாரியுங்கள் என கூறி அவருக்கு தொலைபேசி அழைப்பு எடுக்க முற்பட்ட போது  கையடக்க தொலைபேசியை வலுக்கட்டாயமாக பறித்துள்ளனர்.

வீட்டில் மனைவிக்கு அழைப்பு எடுத்து அடையாள அட்டையை எடுத்து வருமாறு கூற தொலைபேசியை தருமாறு கோரிய போதிலும் பொலிஸார் தொலைபேசியை கொடுக்கவில்லை.. 

அவரை வலுக்கட்டாயமாக இழுத்து முச்சக்கர வண்டியில் ஏற்றி காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று , அங்கு விசாரணைகளை முன்னெடுத்து , சிங்களத்தில் எழுதிய தாள்களில் கையெழுத்து வாங்கி , இரண்டு கைகளின் அடையாளங்களையும் பெற்று , உடம்பில் உள்ள அங்க அடையாளங்களையும் குறித்துக்கொண்டனர். 

அதற்கு இடையில் அடையாள அட்டை இல்லை என பொலிஸார் கணவனை கைது செய்து கொண்டு சென்றனர் என  மனைவிக்கு அயலவர்கள் கூறியதை அடுத்து , அவர் அயலவர் ஒருவரிடம்  அடையாள அட்டையை கொடுத்து , பொலிஸ் நிலையம் அனுப்பி வைத்து விட்டு , எனது பிள்ளைகளை பாடசாலைக்கு கூட அனுப்பாது அயல் வீட்டில் பிள்ளைகளை விட்ட பின்னர் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.

அதற்கு இடையில் அடையாள அட்டையை பொலிஸ் நிலையத்தில் அயலவர் கொண்டு வந்து கொடுத்ததும் , கைதானவருக்கு  உணவளித்து , அவரை விடுவித்தனர். 

மனைவி பொலிஸ் நிலையம் வந்ததும் , கணவனை கைது செய்த இடத்திலையே தாமே கொண்டு வந்து விடுவதாக கூறி மீண்டும்  முச்சக்கர வண்டியில் அழைத்து வந்து கைது செய்த இடத்திற்கு அருகில் இறக்கி விட்டு சென்றுள்ளனர்.

தன்னிடம் பெற்ற கைரேகையால் பின்னாட்களில் பொலிஸார் ஏதேனும் வழக்குகளை தொடுத்து விடுவார்களோ என்ற பயம் தனக்கு இருக்கிறது என பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் அச்சத்தில் இருக்கிறார்.

No comments