வவுனியா தாண்டிக்குளத்தில் அமைந்துள்ள வாகன திருத்தும் நிலையத்தில் இருந்து 1900 லீட்டர் எரிபொருள் மீட்கப்பட்டுள்ளது.
வாகன திருத்தும் நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவான எரிபொருள்களினை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதன் போது சுபப்ர் டீசல் 900 லீற்றர், டீசல் 600 லீற்றர் மற்றும் பெற்றோல் 400 லீற்றர் கைப்பற்றப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







No comments