PickeMe நிறுவனத்தால் ஓட்டுனர்களுக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக ஓட்டுனர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் , அதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் திங்கட்கிழமை போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
PickMe நிறுவனம் ஒரு மாதத்திற்கு 400 வாகனங்களை பதிவேற்றம் செய்தாலும் கூட அந்த வாகன ஓட்டுனர்களுக்கான கட்டணங்களை குறைத்து கொண்டே செல்வதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக ஒரு கிலோ மீற்றருக்கான கட்டணம் 80 ரூபாய் என கூறப்பட்டாலும் மூன்று கிலோ மீற்றர் சென்றால் 290 ரூபாவாகும். அக்கட்டணத்திலிருந்து 11 ரூபாய் கழிக்கப்பட்டு பின்னர் 12 வீதம் கழிக்கப்பட்டு மீதி வரக்கூடிய கட்டணத்திலிருந்து மூன்று பங்காக பிரித்தால் 60 அல்லது 70 ரூபாயே தமக்கு கிடைப்பதாக ஓட்டுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இவ்வாறு ஒரு கிலோமீற்றரிற்கு 60 ரூபாயை வைத்தால் தற்போது நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் பற்றாக்குறையில் எவ்வாறு இதில் சம்பாதித்து தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்? என PickMe ஓட்டுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும் குறித்த PickeMe ஓட்டுநர்கள் பயணி ஒருவரை ஏற்றுவதற்கு இரண்டு அல்லது மூன்று கிலோமீற்றர் பயணித்தே பயணியை ஏற்றி வர வேண்டும். எனினும் இதற்கான கட்டணம் குறித்த ஓட்டுனருக்கு கிடைப்பதில்லை. இதனாலும் தாங்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும், ஓட்டுனர்களை பயணிகளின் பிரச்சினைகளை கேட்டு PickeMe நிறுவனம் தடை செய்யும் போது குறித்த பயணிகளின் பிரச்சினைகள் மட்டுமே கேட்கப்படுகின்றது. ஆனால் ஓட்டுனர்கள் தரப்பில் இருந்து எந்தக் கருத்துக்களையும் கேட்பதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இலங்கை முழுவதும் PickeMe நிறுவன ஓட்டுனர்கள் பல இலட்சம் ரூபாய்க்கு மேல் ஏமாற்றப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
எனவே, குறித்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் விசாரணைகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என PickMe ஓட்டுனர்கள் சார்பாக கோரிக்கை விடுக்கின்றோம்.
அத்துடன் நாளைய தினம் திங்கட்கிழமை அனைத்து PickMe சாரதிகளும் பாரிய போராட்டம் ஒன்று நடந்த திட்டமிட்டுள்ளனர் என்றும், இதற்கு எல்லா சாரதிகளும் Off Line செய்து போராட்டத்துக்கு கலந்துகொள்ளுமாறு கோரியுள்ளனர்







No comments