மணற்காட்டிற்கு சுற்றுலா சென்றவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவர்களிடம் மனித உரிமை ஆணைக்குழு வாக்கு மூலங்களை பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு , மணற்காட்டு பகுதிக்கு சுற்றுலா சென்ற குழுவிற்கும், மணற்காட்டில் சிவில் உடையில் தமது விடுமுறை கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவிற்கும் இடையில் ஏற்பட்ட தர்க்கம் கைக்கலப்பாக மாறியதில் , பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உள்ளிட்ட மூவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் , காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் மூவரிடமும் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.







No comments