செம்மணி புதைகுழி காணப்படும் பகுதியை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பார்வையிட யாழ்.நீதவான் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.
ணி புதைகுழி பகுதியை நேரில் பார்வையிட ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்திருந்தனர்.
அது குறித்து இன்றைய தினம் நடைபெற்ற செம்மணி புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணையின் போது ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் புதைகுழி பகுதியை பார்வையிட மன்று அனுமதித்துள்ளது.
அதன் அடிப்படையில் எதிர்வரும் 21ஆம் திகதி காலை 09.30 மணிக்கு முன்னராக அல்லது மாலை 02.30 மணிக்கு பின்னராக புதைகுழி காணப்படும் பகுதிக்கு சென்று நேரில் பார்வையிட முடியும் என அனுமதித்துள்ள மன்று ,இரண்டு நேரங்களில் எந்த நேரத்தில் செல்லவுள்ளனர் என்பதனை முன்னரே மன்றுக்கு அறிவிக்க வேண்டும் என மன்று அறிவுறுத்தியுள்ளது.





.jpg)



No comments