Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுக்கான பாதீட்டுக்கு நீதி அமைச்சு அங்கீகாரம் வழங்கவில்லை


செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கான செலவீன பாதீட்டுக்கு நீதி அமைச்சு இன்று வரையில் அனுமதி வழங்காதமை தொடர்பில் யாழ் . நீதவான் நீதிமன்றுக்கு சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தெரியப்படுத்தியுள்ளார்

செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது. 

அதன் போது , மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை எதிர்வரும் 20ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் , அன்றைய தினம் அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கான ஏது நிலை காணப்படவில்லை. அதனால் 27ஆம் திகதி ஆரம்பிப்பது தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது . 

அதன், மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கான பாதீட்டுக்கான அங்கீகாரம் நீதி அமைச்சினால் இது வரையில் வழங்கப்படவில்லை என்ற விடயத்தை சட்ட வைத்திய அதிகாரி மன்றில் சுட்டிக்காட்டினார். 

அதனை அடுத்து பாதீடு தொடர்பிலும் , 27ஆம் திகதி அடுத்த கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க முடியுமா என்பதனை இறுதி செய்யும் வகையிலும் எதிர்வரும் 21ஆம் திகதி திறந்த மன்றில் வழக்கினை விசாரணைக்கு எடுத்து கொள்ள திகதியிடப்பட்டது

அதேவேளை , புதைகுழியில் இருந்து வெள்ளநீர் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் தற்போது சிறிதளவான ஈரலிப்பு தன்மையே காணப்படுகிறது. 20ஆம் திகதிக்கு முன்னர் அகழ்வு பணிக்கு ஏற்றவாறான நிலைமை காணப்படும் என எதிர்க்கப்பார்க்கப்படுவதாக மன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

No comments