நாட்டுக்கு 110 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தி வந்த 22 பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டிற்கு திரும்பிய 22 பௌத்த பிக்குகளின் பயண பைகளை சோதனையிட்ட போது ஒவ்வொரு பௌத்த பிக்குவின் பயண பைகளிலும் சுமார் 5 கிலோ கிராம் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் , சோதனையின் போது , அவை மீட்கப்பட்டுள்ளன.,
மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் குஷ் மற்றும் ஹஷிஸ் ரக போதைப்பொருட்கள், அவை சுமார் 110 கிலோ நிறையுடையது , அவற்றின் பெறுமதி 110 கோடி ரூபாய்க்கும் அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பிக்குகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பிக்குகள் குழு கடந்த 22ஆம் திகதி தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு சாதாரண உடைகளில் அவர்கள் நடமாடியுள்ளனர். அவை தொடர்பிலான காணொளிகள் , ஒளிப்படங்கள் என்பவை பிக்குகளின் கைப்பேசிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அவர்களை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதிகாரிகள் விசாரணைகளின் பின் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.








No comments