யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த போதை வியாபாரி போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநகர் பகுதிகளில் நீண்ட காலமாக நபர் ஒருவர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ,விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த நபரை நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரின் உடைமையில் இருந்து, 2கிராம் 35 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.









No comments