Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தாண்டிக்குளம் புகையிரத விபத்து - முச்சக்கர வண்டி சாரதியும் உயிரிழப்பு!


வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற  புகையிரத விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த முச்சக்கரவண்டி சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலுடன், தாண்டிக்குளம் ரயில் நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானது. 

விபத்தில்  முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

No comments