Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நெடுந்தீவு சமுத்திர தேவாவை புனரமைக்க 2.614 மில்லியன் ஒதுக்கீடு


நெடுந்தீவு - குறிகட்டுவான் இடையில் சேவையில் ஈடுபடும் சமுத்திர தேவா படகினை புனரமைக்க 2.614 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், அதனை புனரமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். 

வடக்கு மாகாண சபையின் வர்த்தக வாணிப அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஆளுநர் தலைமையில் நடைபெற்ற போதே அதிகாரிகளுக்கு அவ்வாறு பணித்துள்ளார்.

குறிகட்டுவான் - நெடுந்தீவு இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான சமுத்திரதேவா பயணிகள் படகு நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது அதனால் பயணிகள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர். 

இந்நிலையில் படகினை திருத்தம் செய்வதற்கு, 2.614 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ,உடனடியாக படகைப் புனரமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஆளுநர் பணித்துள்ளார். 

No comments