Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சிறைச்சாலையில் இருந்து தப்பியோட முயன்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு - இரு கைதிகள் படுகாயம்


காலி சிறைச்சாலை காவலில் இருந்து தப்பியோட முயன்ற கைதிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.

காலி சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் நேற்று பிற்பகல் தப்பியோட முயன்ற போது அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த இருவரே இவ்வாறு தப்பியோட முற்பட்டுள்ளனர்.

சிறைச்சாலை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு கைதியின் தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த கைதி உடனடியாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர் கல்கமுவ, கோஜராகம பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற போது இரு சந்தேக நபர்களினதும் கைகள் இணைக்கப்பட்டு கைவிலங்கிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த இரு சம்பவங்கள் குறித்தும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. 

No comments