கல்கமுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக நபர் ஒருவர், பொலிஸ் காவலில் இருந்து தப்பியோட முயன்ற போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் வண்டியில் ஏற்ற முற்பட்ட போது, விலங்கிடப்பட்டிருந்த இருவர் பொலிஸ் நிலைய நுழைவாயிலில் இருந்து சுமார் 75 மீற்றர் தூரம் ஓடி தப்பிக்க முயன்றுள்ளனர்.
இதன்போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவரின் முழங்காலுக்குக் கீழ் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் தொடர்ந்து அவர்கள் ஓட முடியாத நிலையில் அவர்களை இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்









No comments