Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தேசிய ரீதியில் 12 விருதுகளை வென்று சாதனை படைத்த மன்னார் மாணவர்கள்


கல்வி அமைச்சு மற்றும் டவர் ஹோல் (Tower Hall) நாடக மண்டபம் இணைந்து நடாத்திய தேசிய ரீதியிலான நாடகப் போட்டியில்,  குறு நாடகம் ,நெடு நாடகம் ஆகிய இரண்டு நாடகங்களில் பங்கு பற்றி 12 தேசிய விருதுகளை மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி வென்று சாதனை படைத்துள்ளது  

சாதனை படைத்த மாணவர்கள்  மற்றும் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களைக்  கௌரவிக்கும் நிகழ்வு  இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கல்லூரியில் இடம் பெற்றது.

தேசிய விருதுகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் நாடகங்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களை மன்னார் பேருந்து  நிலையத்திலிருந்து ,மாலை அணிவித்து , பேண்ட் வாத்திய இசையுடன்  கல்லூரிக்கு  ஊர்வலமாக  அழைத்துவரப்பட்டனர் 

அதனைத் தொடர்ந்து  பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நாடகப் போட்டியில் விருதுகள் பெற்ற மாணவர்கள், மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களான தெய்வேந்திரராஜா டினேஸ் மற்றும் அல்டினா குரூஸ்  ஆகியோருக்கு விருதுகள் வழங்கிப் பொன்னாடை போர்த்து கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில்  விருந்தினர்களாக, மன்னார் மாவட்ட செயலர் க.கனகேஸ்வரன்,மேலதிக செயலர் எம்.பிரதீப்  மன்னார் மாவட்ட வலயக்  கல்வி பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சுதர்சினி ஸ்ரீகாந்தன், முல்லைத்தீவு கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் மனோரஞ்சன்,  பாடசாலையின்  அபிவிருத்திச்  சங்க உறுப்பினரும் அன்னை இல்ல நிர்வாகியுமான சு.பிருந்தாவனநாதன், பாடசாலையின் அபிவிருத்திச் சங்கச் செயலாளர் ம. நடேசானந்தன்  ஆகியோர்  கலந்து கொண்டதோடு,

பாடசாலையின் அதிபர்,பிரதி அதிபர், உதவி அதிபர் , மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள்,பழைய மாணவர்கள் பெற்றோர்கள்  என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.










No comments