Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

"Green Jaffna Project" ஆரம்பம்


யாழ்ப்பாண மருத்துவச் சங்கம் ஆனது யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் நல்லூர் பிரதேச சபை ஆகியவற்றுடன் இணைந்து "Green Jaffna Project" என்னும் மரநடுகைச் செயற்றிட்டம் ஒன்றினை இன்று ஆரம்பித்தது.

யாழ்ப்பாண மருத்துவச் சங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற இச் செயற்றிடத்தின் கீழ் முதற்கட்டமாக ஆடியபாதம் வீதி, பொற்பதி வீதி ஆகிய வீதிகள் முதற்கட்டமாக உள்வாங்கப்பட்டுள்ளன.

அதற்கு அமைவாக யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு முன்பாக நடைபெற இவ் நிகழ்வில் வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர், யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி, யாழ்ப்பாண மருத்துவச் சங்க பிரதிநிதிகள், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளர், யாழ்.மாநகர சபை ஆணையாளர், வைத்திய நிபுணர்கள், யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலகள் எனப் பலரும் கலந்து கொண்டு மர நடுகையில் ஈடுபட்டனர்





No comments