மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன உப்போடை களப்பு பகுதியில் இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
இதுவரை அவர்களின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகில் கள்விற்பனை நிலையம் ஒன்று இயங்கி வருவதால், அங்கு வந்தவர்களாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், சடலங்கள் காணப்பட்ட இடத்துக்கு அருகில் இரண்டு சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடற்கூற்று பரிசோதனைக்காக சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.









No comments