Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ். தேவிக்கு சனிக்கிழமை விடுமுறை


யாழ். தேவி கடுகதி புகையிரதம் 100 நாட்களின் பின்னர் காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. 

மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரத பாதையில் ஐந்து புகையிரத பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் ஏதுவாக வடக்குக்கான புகையிரத சேவைகள் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தமிழ் - சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு, கடந்த ஏப்ரல் மாதம் 09ஆம் திகதி முதல் குளிரூட்டப்பட்ட நகர் சேர் கடுகதி புகையிரத சேவைகள் ஆரம்பமானது. 

அதனை தொடர்ந்து ஒரு மாதத்தின் பின்னர் யாழ். தேவி கடுகதி புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட புகையிரதம் பிற்பகல் 2.25 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய புகையிரத நிலையத்தை வந்தடைந்தது. 

இந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. 

கடந்த காலங்களில் தினசரி சேவைகளாக இடம்பெற்ற குறித்த புகையிரத சேவைகள் தற்போது ஒன்று விட்ட ஒருநாள் நடைபெறவுள்ளது.

 அந்த வகையில் கொழும்பில் இருந்து திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களிலும் , காங்கேசன்துறையிலிருந்து செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய நாள்களில் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சனிக்கிழமைகளில் யாழ். தேவிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.





அத்துடன் இந்த புகையிரதமானது குளிரூட்டப்பட்ட முதலாம் வகுப்பு பெட்டிகள் நான்கை கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


No comments