மாகாண சபையை அடுத்த ஆண்டே நடத்த கூடிய சாதகம் காணப்படுவதாக , மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் , ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஆண்டு பாதீட்டில் மாகாண சபை தேர்தலுக்காகப் பணம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், 'டித்வா' (Dithva) புயல் பாதிப்புகள் காரணமாக, அந்தப் பணத்திலிருந்து 500 பில்லியன் ரூபாயை (5,000 கோடி) நிவாரணப் பணிகளுக்காக ஒதுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக, திட்டமிட்டபடி இந்த ஆண்டில் தேர்தலை நடத்த முடியாமல் போனது.
அத்துடன், ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்காக இருந்த சட்ட நடைமுறைகளில் சில சிக்கல்கள் ஏற்பட்டன.
தற்போது இச்சிக்கல்களைத் தீர்ப்பதற்காக நாடாளுமன்றக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், அதனைப் பரிசீலித்து அடுத்த ஆண்டளவில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பாக இந்திய அரசிடமிருந்து எந்தவித அழுத்தங்களும் இல்லை. இந்திய அரசிற்கும், எமது அரசாங்கத்திற்கும் இடையில் மிகவும் இணக்கமான, நட்புறவான மற்றும் ஆரோக்கியமான புரிந்துணர்வு நிலவுகிறது என மேலும் தெரிவித்தார்.





.jpg)



No comments