Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

புலிகளின் தலைவர் தொடர்பில் எனக்கு தெரியாது !


தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் உடலம் தொடர்பில் சரத் பொன்சேகா கூறிய தகவல்களுக்கு நாம் பதில் கூட முடியாது என  மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் , ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, புலிகளின் தலைவரின் உடல் புதைக்கப்பட்ட இடம் தனக்கு தெரியும் என்றும் , ஆனால் அந்த இடத்தை நான் கூற மாட்டேன் என சரத் பொன்சேகா கூறிய தகவல் குறித்து ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

சரத் பொன்சேகா கூறிய கருத்து தொடர்பில் எங்களுக்கு எதுவும் தெரியாது. அத்துடன் சரத் பொன்சேகா என்பவர் அரசாங்கத்தின் பிரதிநிதி அல்ல; 

அவர் ஒரு முன்னாள் இராணுவத் தளபதி மாத்திரமே. அவர் அவ்வப்போது இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகிறார். அவரது கருத்துக்களுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. எனவே, இது குறித்து எங்களால் எந்தவொரு விளக்கத்தையும் வழங்க முடியாது. என தெரிவித்தார்.



No comments