சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட 35 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கான காசோலைகளை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்,சிறிபவானந்தராசா வழங்கி வைத்துள்ளார்.
சண்டிலிப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது .
மீள்குடியேற்ற வீட்டுத்திட்டத்தின் மூன்றாவது கட்டத்தின் கீழ் 2009ஆம் ஆண்டிற்கு முன்னர் திருமணம் செய்து கொண்டு, நீண்டகாலமாக நிரந்தர வீடின்றி வாழ்ந்து வருபவர்களில் தெரிவு செய்யப்பட்ட 35 குடும்பங்களுக்கு தலா 20 இலட்ச ரூபாய் பெறுமதியான வீட்டு திட்டம் வழங்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் முதலாவது கட்டமாக உதவி தொகையில் 4 இலட்ச ரூபாய்க்கான காசோலைகள் நாடாளுமன்ற உறுப்பினரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த உதவித்திட்டம் வெறும் வீடமைப்பு திட்டமல்ல, போராலும் இடம்பெயர்வாலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை, நம்பிக்கையுடன் கூடிய எதிர்காலம் மற்றும் சமூக மரியாதையை மீட்டெடுக்கும் மனிதநேயப் பயணமாகும்.
எமது அரசாங்கத்தினால் மக்களின் அடிப்படை தேவைகளை முன்னுரிமைப்படுத்தி தொடர்ச்சியான அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்,பவானந்தராசா தெரிவித்தார்.














No comments