Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்.வேம்படி மாணவி தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்க செயற்பாட்டிற்கான விருதினை பெற்றார்






யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்க செயற்பாட்டிற்கான விருதினை பெற்றுள்ளார். 

வருடாவருடம் தேசிய ரீதியில் சிறந்த புத்தாக்குனர்களையும் புத்தாக்க செயற்பாடுகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் விருது வழங்கும் விழா SLASSCOM நிறுவனத்தின் ஆதரவுடன் இடம்பெற்று வருகிறது.   

இவ் வருடத்திற்கான விழா காலி முகத்திடல் ITC ரத்னதீப (ITC Ratnadipa) விருந்தினர் விடுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. 

இதில் வட மாகாணத்திற்கான பாடசாலை ரீதியில் சிறந்த புத்தாக்கமாகவும் இவ்வருடத்திற்கான சிறந்த புத்தாக்குனராகவும் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையை சேர்ந்த செல்வி ரூபிகா அருந்தவம் தெரிவுசெய்யப்பட்டு அவருக்கான விருதும் சான்றிதழும் குறித்த நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டது. 

இதே மாணவி கடந்த ஜுன் 05ஆம் திகதி மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட காலநிலை மாற்றத்திற்கான புதிய கண்டுபிடிப்பு போட்டியிலும் பங்குபற்றி சிறப்பு சான்றிதழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 






No comments