Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வர்த்தகரிடம் 10 இலட்ச ரூபாய் லஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது


களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

களுத்துறை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான வாகனம் தொடர்பாக விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையொன்றை மேற்கொண்டு வந்துள்ளது. 

அந்த விசாரணைக்கு அமைவாக, நீதிமன்றத்தில் குற்றவியல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யாமல் இருப்பதற்காக, குறித்த பொலிஸ் பரிசோதகர் 10 இலட்சம் ரூபா பணத்தைக் கோரியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சந்தேகநபரான பொலிஸ் பரிசோதகர், இதற்கு முன்னர் முறைப்பாட்டாளரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். 

இந்நிலையில், மீதித் தொகையான 09 இலட்சம் ரூபாவைத் பெற்றுக்கொள்வதற்காக களுத்துறையிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றிற்கு வந்திருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பொலிஸ் பரிசோதகர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்

No comments