Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சிறையில் தனது பிறந்தநாளை கழித்த சொல்லிசை பாடகர்


பிறந்தநாளை யாழ்ப்பாணம் சிறையில் கழித்த விளக்கமறியலில் உள்ள தமிழ் சொல்லிசை பாடகர் சங்கீத்சனை அவரது தாயாரும் சட்டத்தரணி கேசவன் சயந்தன் உள்ளிட்டவர்களும் இன்று சிறைக்குச் சென்று பார்வையிட்டனர்.

எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் அதற்கான ஆவணங்களில் கையொப்பம் வாங்கும் நடவடிக்கைக்காக சட்டத்தரணி கேசவன் சயந்தன் உள்ளிட்டோர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்தனர்.


விளக்கமறியலில் உள்ள சொல்லிசை பாடகர் சங்கீத்சனின் பிறந்தநாள் இன்று வெள்ளிக்கிழமை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments