சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு , உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஞா.கிசோர் , உள்ளூராட்சி ஆணையாளரால் விடப்பட்ட சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து , அதனை தூக்கி வீசியமை தொடர்பிலான குற்றச்சாட்டில் பதவி பறிக்கப்பட்டு , உறுப்பினர் பதவியையும் வறிதாக்கி, வடமாகாண ஆளுநர் வர்த்தமானி ஊடாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் "ஒருவரின் கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்தியதற்காக அவரின் பதவியைப் பறிப்பது ஜனநாயகக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமான செயலாகும்" என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.









No comments